யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டியை வதிவிடமாகவும், ஜேர்மனி Ellhofen Heilbronn ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சற்குமார் குலசேகரம்பிள்ளை அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தம்பு தவலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சசிலா, சஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சின்னமணி), கிருஷ்ணபிள்ளை(அழகராசா), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம்(யோகராசா), அம்பிகா ராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் சற்குணதேவி, ரோகினி, ராஜேந்திரன், கங்காதரன், பாஸ்கரன், சாந்தினி, விஜயாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.