யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஸ்ராலின் அன்னமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உன்னைக் காவுகொண்டு
ஆண்டு ஒன்று ஆனதுவோ தாயே
நம்பமுடியவில்லை உன் நினைவால்
தவிக்கின்றோம் அம்மா..!!!!
ஆண்டு ஒன்று என்ன ஆயிரம் தான் ஆனாலும்
என்றும் நீங்காது எம் மனதில் உன் நினைவு
நித்தம் நிலைத்து நிற்கும்
நீ எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
இனி வருமோ ஏங்குகின்றோம்......!!!!
என்றென்றும் எம் வாழ்வில்
ஒளி தந்த தீபம்
நீ போன இடம் தேடி
உன்பிரிவால் துடிக்கின்றோம்....!!!
நாள்தோறும் நாம் உன்னை
எம் இதயத்தில் இருத்திடுவோம்
எங்கள் குடும்ப ஒளிவிளக்கே
எல்லாம்வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்..