யாழ். அப்பிளாக்காய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரலிங்கம் பத்மாவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-03-2022
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 12-03-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும்.