யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை சந்தியாகோ அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாகோ, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தேவசகாயம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரான்சிஸ்கம்மா(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மரினா(கனடா), ஜெசினா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பயஸ்(கனடா), ஸ்ரனிஸ்லஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெரிக்(கனடா), ஜெய்ஷன்(கனடா), றொஷான்(கனடா), சகானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தியாகு, சங்குவதி, ஞானபிரகாசம், அடைக்கலமுத்து மற்றும் ஞானமுத்து(ஹொலண்ட்), செல்லமணி(நியூசிலாந்து), அருள்மணி(ஆனைக்கோட்டை), மனோன்மணி(ஆனைக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.