யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும். ஜேர்மனி Leinfelden-Echterdingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் ஸ்ரீ காந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-03-2022
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு இரண்டாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை
இரண்டு வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!