மரண அறிவித்தல்

திருமதி சண்முகரத்தினம் பத்மாவதி (ராணி)
Born 17/10/1931 - Death 22/03/2020 யாழ். மானிப்பாய் சுதுமலை (Birth Place) வெள்ளவத்தை (Lived Place)யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வெள்ளவத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரத்தினம் பத்மாவதி அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(மலேசியா) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருளம்பலம்(அல்லைப்பிட்டி முன்னாள் விதானையார்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் சண்முகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரவதி(நோர்வே), Dr. மகாதேவா(இலங்கை), காந்திமதி(டென்மார்க்), சுமதி(நெதர்லாந்து), வாசுதேவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமசிவம்(நோர்வே), சாந்தினி(இலங்கை), சிவானந்தலிங்கம்(டென்மார்க்), கஜேந்திரன்(Holland, Shaarilaan Imp), கலா(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
Dr. வாஷினி(இலங்கை), விபீஷன்(இலங்கை), விஷ்ணுதரன்(ஜப்பான்), ஷர்மிலன்(நெதர்லாந்து), சாருஜன்(நெதர்லாந்து), சாருஷன்(பிரித்தானியா), ஷாருகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குலசேகரம், ராஜசேகரம், கணேஸ் மற்றும் ஜெயலக்சுமி(பேபி), ருக்மணிதேவி, Dr. சர்மிஸ்டாதேவி(பவளம்), பாலசிங்கம், சுபத்திரா தேவி(பூவா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரநாதன்(அல்லை), பராசக்தி குருசாமி மற்றும் கெங்காதரன், பரமேஸ்வரி பஞ்சாட்சரம், மகேஸ்வரி அருமைநாயகம், புவனேஸ்வரி சோமசுந்தரம், Dr. கமலாதேவி அருணாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் 12:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த நிகழ்வுகளுக்கு 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details