யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுமாரி ஆனந்தப்பா அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
திரு. திருமதி ஆனந்தப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகராசா ஆனந்தப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன்(கனடா), ரமணன்(ராம்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிரஞ்சனா, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜேஸ்வரி ஞானரத்தினம், பரமேஸ்வரி கைலாயபிள்ளை, செல்வராணி தினகரன், கலைவாணி சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஷ்விதா, கார்த்திக், அஞ்சலினா, சிவானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.