யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி மகேந்திரா அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற தனபாலசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
மீரா மைதிலி(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
பாஸ்கரன்(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அஸ்விகா, பாருணி, அக்சவி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற பராசக்தி(பவளம்), தங்கராசா, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, அன்னபூரணம், படைவீரசிங்கம், புவனேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரிஅரன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.