யாழ். அல்வாய் அத்தாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne, கனடா Scarborough, Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து இராசலிங்கம் அவர்கள் 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று Mississauga இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேசுரன் (Alvai Sub-Post Master), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தலட்சுமி(லாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்மியா, தனுஷன், விஷ்ணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம், ரஞ்சி(இலங்கை), ராமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றோகினிதேவி, விஜி, கங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.