யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கு மணலாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rubelles ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னன் குலசிங்கம் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பொடியன், லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பபிசாந், பிருந்தா, இம்மானுவேல், குளோறியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரனி ரோபேட் அன்ரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசையா, பாலசிங்கம்(கரவெட்டி), காலஞ்சென்றவர்களான சித்திரம், பூமணி மற்றும் ராசமணி(கரவெட்டி), சிவலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.