யாழ். உத்தரிய மாதா கோவிலடி, வயாவிளான் வடமூலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் யேசு மரியதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்றானாலும் அப்பா - எங்கள்
அன்புத் தெய்வமே உங்கள் முகம்
தேடி தந்தையே மூன்றாண்டென்ன
மூன்றுயுகம் கடந்தாலும் ஏதோவொன்றாய்
உங்கள் ஞாபகம் அப்பா...
ஏன் இந்த நிலைமை எமக்கு?
எம்மை அரவணைத்து வழி காட்ட
யாரும் இல்லாமல் தவிக்கின்றோம்
எல்லாம் எமக்கு சொல்லித்தந்த நீங்கள்
நீங்கள் இல்லாமல் வாழ்வதற்கு
சொல்லித் தரவில்லையே