யாழ் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10ம் கட்டை உயிலங்குளம், லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 30-03-2020
மூன்று வருடங்களாய்
வாழ்க்கையில் தனி மரமானேன்
என்னவள் நீ மறைந்ததினால்...!!!
வாழ்ந்த காலங்களில் பூமியில்
நீ என்னுயிரானாய்....!!!
அன்பே உயிரில்லா உடலாய் வாழ்கிறேன்
உன்னும் உணவில் நீ இல்லை
உறங்கும் கட்டிலில் நீ இல்லை
செல்லும் வழியில் நீ இல்லை
எங்கும் நீ இல்லை....!!!
என் இதயத்தில் என் உயிராய் உறங்குகிறாய்
என் அன்பே நீ மறையவில்லை
என் உயிருள்ள வரை வாழ்வாய் என்னில்....!!!!
பத்துமாதம் எம்மை சுமந்து பெற்று
பாலுட்டி, சீராட்டி எம்மை
கல்விபயில பல்கலைகழகம் வரை
அனுப்புவதற்காக இறுதிவரை எமக்காக வாழ்ந்த
எமது அன்னையே....!!!
தாயே நாங்கள் உங்களை நினைக்காத
அம்மா என்று அழைக்காத நாட்கள்
நாம் பிறவாநாளே அம்மா..!!!
எமது தெய்வமாகிய எமது அம்மா
எங்கள் மூவரையும்
பாரத்து வழிநடத்துகின்றீர்கள்
நாங்கள் என்றும்
நல்ல பிள்ளைகளாக வாழ்வோம் அம்மா....!!!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
கணவன், பிள்ளைகள், சகோதரர்கள்,
மைத்துனர்மார், மைத்துனிமார்
உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்