யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிளமென்டா மரியாம்பிள்ளை அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, ரெஜினா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற ஜோசப் மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குலேந்திரன், மகேந்திரன், இந்திராணி, லொரட்டா, ராஜன், தனேந்திரன், ஜெனவின்(காந்தா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகமலர், காலஞ்சென்ற சாந்தி, ஜோசப், ஏபல், அஞ்சலா, Christeena, யூட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.