யாழ். கொக்குவில் மேற்கை பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நாகரத்தினம் தெய்வேந்திரன் அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் பராசக்தி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான நந்தாவில் கொக்குவிலைச் சேர்ந்த இராசரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
ஜீவா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தாரணி, ஜனகன், ஜனந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிஷான் அவர்களின் அருமை மாமனாரும்,
கவின், தேவன், ரைலர் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், பசுபதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், நவரத்தினம், கனகரத்தினம், ஶ்ரீபதி மற்றும் அரசரத்தினம்(கனடா), கமலா(லண்டன்), லீலா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.