யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபிநாத் கணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
வளர்ந்து வந்த வழி மாறி
நீ எங்கே சென்றாயடா!
என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?
மீண்டும் உன் முகம் ஒரு முறை தோன்றாதடா?
மறுபடியும் உன் முகத்தை பார்த்திடுவோமா?
எம்மால் ஆறமுடியவில்லையடா
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்!!