யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி சிவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
நேற்று போல் இருக்கிறது உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய் அம்மா!
மரணம் உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!