யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு நடராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
அப்பா என்று நாம் அழைக்க நீர் வராத துன்பம்
அடுத்தொரு பிறப்பெடுத்து வந்து தந்திடப்பா ...
காலங்கள் கடந்து சென்றாலும், ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்புப் போல், அருகிலே நீ வாழ்வதை நாம் உணர்கிறோம்.....
கடலுடன் என்றுமே வாழும் அலைகள் போல்
எமது உயிரில் கலந்த உறவே..!
உன் ஞாபகங்கள் வானத்தில் உள்ள மேகம் போல் என்றுமே
அழியாது, எமது உயிரே..!
ஆண்டு நூறு கடந்தால் என்ன?
அடுத்தடுத்து நாம் வேறு பிறப்பெடுத்தால் என்ன
அன்றும் இன்றும் மாறாது அப்பா உன் அன்புப் பாசம்
எம்மை மறந்து விட்டு சென்றாலும்-உங்கள்
நினைவுகள் எம்மை வீட்டு நீங்காது-எம்
உள்ளங்களில் இன்றும் துளித்த வண்ணம் உள்ளன
இழந்த உங்கள் அன்பும் நீங்காத உங்கள் நினைவுகளும்,
இதயம் துடிக்கும் வரை என்றும் மாறாது-உங்கள்
நினைவுகள் இயற்கையின் அழைப்பை மீற முடியாத
பயணமாய் எம்மை விட்டு சென்றீர்களே!
கால இழப்பின் காயத்தை மாற்றினாலும்-காலம்
கடந்தாலும் உங்கள் நினைவுகள்-எம்
இதயத்தை விட்டு நீங்காது-எம்மை
விட்டு நீங்கள் சென்றாலும் உங்கள்
உறவுகள் உங்களை என்றும் பூஜித்த
வண்ணம் உள்ளோம்....
ஈராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு குடும்பத்தினர்