யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு இராசரத்தினம் அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி இராசரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி பிரேம்ராஜ்(அவுஸ்திரேலியா), சசிகலா(பிரித்தானியா), உதயராஜ்(பிரித்தானியா), மேகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாராயணி, சிறீதரன், வனுசியா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, அன்னலட்சுமி, துரைசிங்கம் மற்றும் இராசமணி காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லவிண்ராஜ், அஸ்வின்ராஜ், ஜசின்ராஜ், சரன்ராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
டிலக்சன், பிவித்திகா, ஜக்சனா, மதுஜனா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.