யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஐயாத்தாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பசுபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சசிகலா, பாலவிநாயகன்(ஜேர்மனி), வித்தியாதரன், ஸ்ரீதரன், தயாதரன், உதயகலா(இந்தியா), சுவிதகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமர், இராசன், ஞானாம்பாள் மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.