மன்னார் கோயிற்குளத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரபாகு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமணி, ஐங்கரன், மகாலக்ஷ்மி, சாந்தலக்ஷ்மி, தவநாதன், நாகராசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பருவதம், மகேஸ், பர்குணம், காலஞ்சென்ற சீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.