யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை வர்ணலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைஞ்சலி.
கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா?
இல்லை கடவுளிலும் உயர்வு என்று சொல்லவா?
நிகரில்லா என் சுவாசம் நீயே....
உருவம் அறியா கருவிலும் காதல் செய்தவளே
பாலூட்டி தாலாட்டி பகல் இரவாய் கண் முளித்து
கட்டிலிலும் தொட்டிலிலும்
கால் மேலும், தோள் மேலும் சீராட்டி வளர்த்த தாயே....
எமைப் பிரிந்து ஓர் ஆண்டு ஆகியும்
ஓரக் கண்ணில் ஈரம் காயவில்லை அம்மா....
உங்கள் பிரிவில் ஏங்கித் தவிக்கும்
மக்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்