யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சங்கரப்பிள்ளை அவர்கள் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சங்கரப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தப்பு பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காந்திநேசன்(பிரான்ஸ்), உதயசீலன்(நோர்வே), தயாபரன்(கனடா), முரளிதரன்(கனடா), சிறீகௌரி(கனடா), ஞானசீலன்(கனடா), பவானி(கனடா), சிவனருள்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்ததி, சுசீலா, சாந்தி, லலிதா, சூரியகுமார், ஜெயலட்சுமி, ரவீந்திரன், பாலசுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கிட்டிணபிள்ளை, செல்லையா மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.