யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் யோசப் அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பென்யமின் திரேசா தம்பதிகளின் அன்பு மகளும்,
யோக்கியாம்பிள்ளை சைமன் யோசப்(நொத்தாரிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மாக்கிறட், ஜொன்பின் மற்றும் லுசி, காலஞ்சென்ற அன்ரன், யோய், ராஜேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பபி, காலஞ்சென்ற றாஜி, றஞ்சி, றோகினி, கிறிஸ்தோப்பர்(தோப்பர்), மாலா, காலஞ்சென்ற றவி, றபாயல்(டாப்பா), றமி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.