யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை சிவபாக்கியம்
அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே..!!
ஆண்டு ஒன்று ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர் மறையாது
உங்கள் நினைவு!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும் இன்பம்
தரும் தங்கள் இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
மனம் உருகும் உங்கள் குரலையும்
மனம் கவரும் உங்கள் சிரிப்புச்
சத்தத்தையும் மறுபடியும் கேட்கமாட்டோமா..?
ஆயிரம் உறவுகள் அவனியில்
இருந்தாலும் எங்கள் அம்மாவுக்கு ஈடாகுமா..?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புகள் என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!