வவுனியா இளமருதங்குளம் சேமமடுவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Friedeburg, Rehlingen-Siersburg வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் அல்பிறட் அவர்கள் 10-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம், அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான கபிரியேல், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அற்புதம், ஆபிரகாம், புனிதம், ஜோஸ், சிறி, ஜெயசீலி, குணசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எமிலியா, ஏமில்ரன், கமில்ரன், மஞ்சுஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
டெக்ஸ்சர், கொலஸ்ரிக்கா, ஸ்ரெலா, டெனிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டேனிஸ், டெல்சன், டிலக்சன், மிலன், கெவின், டனுசியா, ஜொலின், யனிஸ், யெய்டன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.