யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொட்டடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு லோகேஸ்வரன் கனகரட்னம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தைக்கு
வரைவிலக்கணமே நீதானப்பா!
எங்களை அன்பு மழை
பொழிந்து
பாசமாய்
வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகைப்
பிரிந்து பன்னிரு
மாதங்கள் சென்றதப்பா!
என்ன நடந்தது ஏது
நடந்தது என்று
கணக்கிட்ட நாட்கள்
அதற்குள் ஆண்டு
ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து
ஓராண்டு ஓடி
மறைந்தாலும் உங்கள்
ஒளிமுகத்தை
முன் நிறுத்தி என்றும்
உங்கள் மீளா
நினைவுகளுடன்
வாழ்கின்றோம் அப்பா!
என்றும் உங்கள் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!