யாழ்ப்பாணம் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை அவர்கள்
08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- சுந்தரம்பிள்ளை, திருமதி- கனகாம்பிகை தம்பதிகளின்
அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு-
கனகசுந்தரம், திருமதி- அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிகுமார், சிவகுமார், பாலகுமார், அருணோதயகுமார்,
அருள்ஜோதி, அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிமிஷா, ஆதவி, நிலாவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாளினி, ஜெயப்பிரியா, றஜனி, இதயகுமரன், ரகுநாதன், யுகராணி,
காலஞ்சென்ற சுதன், சங்கரதாசன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.