யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், சுவிஸ் Lausanne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
இல்லறம் சிறக்க இடைவிடாமல்
உழைத்த உத்தமரே!
வளர்பிறையாய் குடும்பம் வளர
தேய்பிறையாய் தேய்ந்து போன
தியாகச் சுடரே! - எங்கள்
உணர்வோடு கலந்த உறவே!
இன்று உங்கள் பிரிவின்
நினைவால் வாடுகின்றோம்!!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!
நீர் அணைந்து ஏழு ஆண்டு
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்றிருத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்.
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்