Malaysia கோலாலம்பூரை பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு- Sri
Lanka, நல்லூர்- Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி
பரமேஸ்வரி குஞ்சிதபாதம் அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- கனகரட்ணம், திருமதி- அழகம்மா தம்பதிகளின்
அன்பு மகளும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், பரஞ்சோதி மற்றும் இந்திராணி
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேஸ்வரி, செந்தில்ரட்ணம், பவானி, சுசிலா, ஹரேந்திரன் ஆகியோரின்
அன்புத் தாயும்,
குகநாதன், ஜெயமோகன், பிறேமா, சித்கணேசன், வசந்தகுமாரி ஆகியோரின்
அன்பு மாமியாரும்,
ஷோபா, சிவேஷ், சைலேஷ், திவ்யன், மதுரி, கஜேன் ஆகியோரின் அன்புப்
பாட்டியும்,
தீரன் ஜெயான் அவர்களின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.