யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா
UK, Morningside கனடா, Scarborough கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி
சுமதி வேலழகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதம்மா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் இரண்டு ஓடி
மறைந்தது ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து இரண்டாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக இருப்பதி நான்கு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
எம் உள்ளத்தின் உள்ளே
வளரும் ஒரு உன்னதமான
மனித தெய்வம் நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம்!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
இரண்டு ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!