யாழ்ப்பாணம் மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் நாயன்மார்கட்டு, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி இலட்சுமிதேவி
சண்முகானந்தன் அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சதாசிவம் ஐயர், திருமதி- கண்ணம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- மோட்சலிங்கம், திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சற்குணலிங்கம், தேவானந்தன், சர்வானந்தன், சதானந்தன் ஆகியோரின் பாசமிகு
தாயும்,
காலஞ்சென்ற பாலசுந்தரக்குருக்கள் செல்லம்மா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
கணேஸமனோகரி, நளினி, சுமங்கலா, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிரோசன், நிந்துஷா, நிலக்ஷா, ஹரிஷ், ஆரணி, ஆகாஸ், நிகல்யா, நிஷங்கா,
ஹரினன், கிஷோன், சுஜோன், லக்ஷோன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.