மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தை வதிவிடமாகவும்
கொண்ட திருமதி நாகேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
இளையதம்பி, திருமதி- சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- வைரவப்பிள்ளை, திருமதி- சின்னப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
உதயமலர், நவநீதன், காலஞ்சென்ற பரநீதன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
மங்கையற்கரசி, காலஞ்சென்ற விவேகானந்தன், மகேஸ்வரி, சிவானந்தன், பரமேஸ்வரி,
காலஞ்சென்ற பரமானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரகாஸ், சுகந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக்கிரியை 16-11-2022 புதன்கிழமை அன்று முற்பகல்
11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுழிபுரம் திருவடிநிலை
இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.