மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் செல்லத்துரை
Born 02/08/1931 - Death 04/05/2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம் (Birth Place) கனடா (Lived Place)யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுப்புலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நடேஸ்வரன், குகனேஸ்வரன், யோகேஸ்வரன், விஸ்னுகுமார், சுபோதினி, சுதாஜினி, சுந்தரேஸ்வரன், அகிலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், நமசிவாயம், செல்லம்மா, கார்திகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமலதா, வாசுகி, கவிதா, கீதா, சபேசன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், யோகம்மா, அன்னம்மா, ரத்தினம், யோகாம்பிகை, தெய்வேந்திரன் மற்றும் செல்லம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரானிகா, சகானா, அபிஷேக், அவநிதா, கிசான், துசான், அஸ்விகா, துஷாரா, ஷகீஸ் ஆகியோரின் அன்புப் அப்பப்பாவும்,
சேனுதா, சகிதா, கவின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் மிகவும் குறைந்த அளவு எண்ணிக்கையான குடும்ப உறவுகளுடன் இடம்பெற இருப்பதால் தயவு செய்து உங்கள் வருகையைத் தவிர்த்துக் கொண்டு உங்கள் அனுதாபங்களைத் தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்கள் ஊடாகவோ பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பார்வைக்கு
06/05/2020 07:00:am - 09:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada