யாழ்ப்பாணம் வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் இந்தியா சென்னை வளசரவாக்கம்,
யாழ்ப்பாணம் ஊரெழு ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பகவதி நாகலிங்கம் அவர்கள் 04-12-2022
ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- வல்லிபுரம், திருமதி- பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- காசிப்பிள்ளை, திருமதி- கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லிங்கபவன், லிங்கரவி, சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற தனுஷா, சத்தியசீலா, லிங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாக்கியம் ரெத்திணம்பாள், சுந்தரவள்ளி,
காலஞ்சென்ற அமிர்தவள்ளி, தர்மலெட்சுமி, மங்கயகரசி, வாலாம்பிகை, குகனேசபிள்ளை,
கந்தவேல், விமலாதேவி, காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்,
மயில்வாகனம், இராசரத்தினம், கனகரெத்தினம், அருமைநாயகம், செவ்வேல், யோகசந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கரிஸ், நிவேஸ், விதுஷ், தருண், சதுயன், சிவா, திவா ஆகியோரின் பாசமிகு
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக்கிரியை பற்றிய
விபரம் பின்னர் அறியத்தரப்படும்.