யாழ்ப்பாணம் மிருசுவில்
வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் இந்தியா Tamilnadu, ஜெர்மனி Neuss, பிரான்ஸ்
Paris ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் வீரகத்தி அவர்கள்
06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சின்னக்குட்டி, திருமதி- சீதேவி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- மரியான், திருமதி-
சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்தி
அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ், மகேந்திரா,
ஜெயா, மனோ, சதீஸ், விஜி, காலஞ்சென்ற இளந்தி ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை,
நளினி, ரஜனி, சுவர்ணா, மகேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம்,
சிவசுப்ரமணியம் மற்றும் சிவராசரத்தினம், சிவராசா, காலஞ்சென்ற சிவனேஸ் மற்றும் துரை,
சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
றெஜீனா, சிவபாக்கியம்,
காலஞ்சென்ற மேரிஉசா, ருக்மணி, ஈஸ்வரி, மீனா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
லக்சனா, மதுஷா, வினோஜ்,
நிருஷா, டினோஜ், சரிஷா, சபிறா, சகினா, அனோஜா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அபினன், அக்சயன் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக்கிரியை
பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.