யாழ்ப்பாணம் மானிப்பாய்
சுதுமலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி
சுப்பிரமணியம் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- செல்லையா, திருமதி- விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
வேலுப்பிள்ளை, திருமதி- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை
சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தபோநிதி, கலாநிதி, முருகதாஸ்,
குகதாஸ், விமலதாஸ், சுந்தரதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயும்,
அருண்குமார், விசாகன்,
வாசுகி, சுகுணா, சிவசகி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பரம்சோதி,
பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லீலாவதி, திவ்யரஞ்சனா
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜனனி, கஜானன், சிந்தூஜா,
வைகுந்தன், தரன், பிரியங்கா, ஆகாஷ், வரண்யா, கோபிகா, தீபிகா, பிரவீன், நவீன், அஷ்வீன்,
கோகுலன், அபிராமி, கோபிதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
உமா, இந்திரா, மைரா,
இஷானா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.