யாழ்ப்பாணம் கோப்பாயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் நல்லூர் Sri Lanka, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் 06-02-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- நொத்தாரிசு ஆறுமுகம், திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- நல்லூர் ரகுநாத மாப்பாணமுதலியார், திருமதி- கமலாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லூர் மாப்பாணமுதலியார் சண்முகதாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மீனலோஜினி அவர்களின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற பாலகுமாரன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மாப்பாணமுதலியார் குகமூர்த்தி, குமாரதாஸ், தண்டாயுதபாணி,
தேவசேனா, கந்தசாமி, கெங்காசுதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மகேஷ்வரி, கார்திகேசுபிள்ளை, சிவாம்பிகை, புனிதவதி,
ஞானாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலினி, சக்கீலா, மனூஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தனன்ஜெயன், லவன், சுஸ்மிதா, சமீத்தா, அம்ரித்தா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.