தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்த யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்று வருடம் தோறும் தமிழ் மக்கள் தமிழினப் படுகொலையின் நினைவு நாளக அனுஷ்டித்து வருகின்றனர்.
இன்று தமிழினப் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு தினத்தினை உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் மக்கள் அவர்களின் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற தமிழின அழிப்பில் உயிர்நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் எம் நெஞ்சம் கனத்த நினைவஞ்சலிகளைச் தமிழ்டிரிபியூட் ஊடாக சமர்ப்பிக்கின்றோம்.
நேற்று
அழுகுரல் எழுந்து
ஊழித் தாண்டவமாடி
இன்று
சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது
நெருப்புமிழ்ந்த மே 18...
நிஜங்களைத் தொலைத்துவிட்டு
வலிகளை வாங்கிவந்த மே 18
முடக்கப்பட்டுவிட்ட
எம்மினத்தின்
முகவரிகளைத் தான் தேடியலைகின்றோம்..
ஒவ்வொருவரும்....
உறவுகளை இழந்து
உரிமைகளைத் தொலைத்து
ஊமைகளாக வாழ்கின்ற
எங்களைத் தழுவிச் செல்லும்
காற்றே.........
சற்று நின்று
இரத்தமும் சதையும் மக்கிப் போய்.
மண்ணோடு மண்ணான
எங்கள் உறவுகளின் தொகையை ஒரு முறை
உலகுக்குச் சொல்வாயா???
மே - 18
ஆறத வலிகளை
அள்ளிச் சுமந்திட்ட
கொடும் நாள்..
அனைத்து உலகமும்
கூட்டாகி கொள்ளி
போட்ட கொடும் நாள்..
தமிழன் கண்ணீருக்கு
விலை சொல்ல
மறந்த நாள்..
முள்ளி வாய்க்கால்
முடிவாகிப் போகாதென்று
அறியப்பட்ட நாள்..