யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் பெரியகல்லாற்றை வதிவிடமாகவும் கொண்ட திரு டனியல் மரியதாஸ் முத்தையா அவர்கள்
03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- முத்தையா,
திருமதி- ஜெயமரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி-
சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரூத்ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறின்சி, வெஸ்லிபிரசாத், தேவபிரசன்னா,
எபினேசபிரதீப், பிறிமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இம்ரியாஸ், மல்கொசாத்தா, றொனி, றமணேஸ்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செபெஸ்ரியன், அன்ரனி, ஜேன்ரட்ணம் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, வள்ளித்தங்கம்,
தங்கராசா, ஆனந்தராசா மற்றும் கிருஷ்ணபிள்ளை அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அர்ஷாத், நிர்ஷாத், ஷகாத், ரெய்டன்,
நத்தானியேல், சகரியா, தீமோத்தேயு ஜகோஷேபா, ஜெஸ்மின், மத்தியு, மாயா, செபஸ்டியன் ஹரிஸ்,
நியோலிஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம்
பின்னர் அறியத் தரப்படும்.