யாழ்ப்பாணம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு Sri Lanka,
கொழும்பு உம்பிச்சி பிளேஸ் Sri Lanka, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி மீனாம்பாள் கனகசபை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மம்மா வார்த்தைகள்
இல்லாத வடிவம் நீ
அளவுகோலே
இல்லாத அன்பு நீ!
அம்மம்மா என்
பிஞ்சுக் கைகளைப் பிடித்து
நடக்கக்
கற்றுக் கொடுத்தாய்!
அன்பைக்
கொட்டிக் கொட்டி
எங்களை
ஆளாக்கினாய்!
தைரியத்தையும்
துணிவையும்
ஊட்டி
வளர்த்த எங்கள் அம்மம்மாவே!
சுயநலம்
இல்லாத இதயத்துடனும்
வெறுப்பைக்
காட்டாத முகத்துடன் வளர்த்தாயே!
ஓராண்டு
ஆனாலும்
உள்ளம்
எல்லாம் தேம்புதம்மம்மா!
அன்பான
புன் சிரிப்பும்
பண்பான
வார்த்தையும்
இனி
எப்போது கேட்போம்!
உங்களது
ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!
----










