யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி தம்பிஐயா அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- நாகமணி, திருமதி-
சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- அப்புக்குட்டி, திருமதி- முத்துப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தம்பிஐயா அவர்களின் பாசமிகு மனைவியும்,
வனிதா, உதயகுமார், சிறிகுமார், சதீஸ்குமார் ஆகியோரின்
பாசமிகு தாயும்,
தனபாலசிங்கம், செல்வராணி, தயாளினி, சகிலா ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, யோகராஜா, பரமலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
சோதிமலர், சாந்தி, ஜெயசிறி, லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
மகிந், சிந்து, பிரிந்தா, சுகந், சுஜீனா, நீனா, ராகவி,
மொபினா, கர்ஷா, அபிஷா, அஸ்மினா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அக்ஷரா, ஷாஷினி, டீரன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.