யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Dietikon(ZH) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தமலர் ஞானசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 30-05-2020
அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது ஆண்டு ஒன்று ஓடி மறைந்தன எம்மை அரவனைத்த அம்மா எங்கே? ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே? கட்டித்தழுவிய கரங்கள் எங்கே?
குடும்பத்தின் குலவிளக்காய் திகழ்ந்த எம் அம்மா எம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும் எம் துன்பம் ஆறாது! ஆறாது!
நாம் மண்ணைத்தொட்ட நாள் முதல் நீ விண்னைத் தொடும் நாள் வரை நீ சொரிந்த அன்பிற்கோ எல்லைகள் ஏது அம்மா ?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும் உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அம்மா...!!
தாய் என்ற சொல்லுக்கே இலக்கணாமாய் தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள்...!! எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும் அத்தனைக்கும் எம் தாய்க்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப்படிகளில் உங்கள் பாதம் பதிந்ததை எப்படி மறந்திடுவோம் அம்மா?
மீளாத்துயில் கொண்ட எம் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்ரோம்