நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் காளிதாஸ் அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், எமிலின் தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, நேசரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சசிதரன்(கனடா), பிரபாகரன்(கனடா), சுஜித்நிர்மல் ஆகியோரின் அன்புத் தந்தையும், சைலஸ்ரீ(கனடா), யோகா(கனடா), ஷாமேன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சந்திரசேன, ரட்ணராஜா, விஜயரண்டம், நவரட்ணம், ரஞ்ஜன் மற்றும் கிருஷ்ணதாஸ், கமலா, லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், கனகாம்பிகை, மல்லிகாதேவி(ஜேர்மனி), சந்திரகுமார், அருள்ஜோதி(ஜேர்மனி), வசந்தகுமாரி(இத்தாலி), சாந்திமாலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாகித்தியன், கீர்த்தனா, தனிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-06-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.