யாழ்ப்பாணம் உடுவில் சபாபதி வீதியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கட்டப்பிராய் வட்டக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு நிஜந்தன் ஜெயந்திரன்
அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- ஜெயந்திரன், திருமதி- செல்வகெளரி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- யோகநாதன், திருமதி – றஞ்சினிதேவி தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
பிரியங்கா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயதர்சி, நிரூபன், நிதுர்சன், ரிதுர்ஷிகா ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
கபிலன், பிரசாந், சாரங்கா, சோபிகா, செல்வராசா, தினேஷ்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அன்ஷிகா, அப்ஷரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.