யாழ்ப்பாணம் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி
Soest ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி புனிதவதி குமாரசாமி அவர்கள் 10-05-2023 புதன்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- கதிர்காமர் , திருமதி- தங்கம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- கணபதிப்பிள்ளை, திருமதி- மாணிக்கம் தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, கனகரெத்தினம், கங்கநாதன்
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரி, கலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சற்குணம், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற துரைராசா, இராசலெட்சுமி, காலஞ்சென்றவர்களான
மங்களேஸ்வரி, கமலம்மா, சிவநேசபிள்ளை, அமிர்தவல்லியம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கிரிஷா- மதிவண்ணன், பிரதீப்- நீரஜா, பிரசாத்- சிந்துஜா,
ஜிந்துஷன், நிரோஜன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அனிஷ், அஷிந், அஸ்னா, விஹான், இஷான் ஆகியோரின் பாசமிகு
கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.