யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Dr. E. A. Cooray Mawatha ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாம்பிகை சாந்தலிங்கம் அவர்கள் 01-06-2023 வியாழக்கிழமை அன்று 95 வது வயதில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சங்கரப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சாந்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுலசீலன்(குகதாசன்), சுகராஜன், விமலதாசன், தவமலர், பரமதாசன், குமாரதாசன், திருமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தினி, யோகராணி, நந்தினி, காலஞ்சென்ற குகநாதன்(மகாராஜா பூட்ஸ்), லதாயினி, சிவசக்தி, சிவசக்திவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, துரைசிங்கம், இராசரட்ணம் மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவித்திரா- மயூரேசன், லாவண்யா, மாதுசன், அனுர்த்தன், திவாஸ்கர், ராகவி, ஜீவிகா, ஜோதிகா, விஜயானந்த்- மித்ரா, வித்தியநாத், கோகுல்நாத், கவான், மிதுன், விதுசா, விக்னவி, அனோஜன், அஞ்சுகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆதியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.25-1/1
Dr. E.A Cooray Mawatha
Colombo 06.