மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் கிழக்கு, கனடா Vaughan ஆகிய இடங்களைப் வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் மங்கயற்கரசி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே! ஆண்டு இரண்டு ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்
துளியாய் வடிகின்றது...
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே...
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது...
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
இரண்டு ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!