மரண அறிவித்தல்

திரு நாகமுத்து சாந்திநாதன்
Born 27/10/1950 - Death 10/06/2023 யாழ். மல்லாகம் (Birth Place) சுன்னாகம், கனடா Toronto (Lived Place)யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகமுத்து கனகம்மா தம்பதிகளின் நான்காவது புத்திரரும்,
சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை ஸ்தாபகர்/முன்னாள் அதிபர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதாமணி(உஷா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிஷாந், றெஜிஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனா, அமலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைரன், கவினா, எரன், வேலன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான யோகநாதன், பத்மநாதன் மற்றும் யோகமலர்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிவநாதன், மற்றும் சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் சந்திரமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
இலட்சுமிதேவி(கனடா), காலஞ்சென்ற அன்னபூரணம், மற்றும் சந்திரகுமாரன்(பிரித்தானியா), உமாராணி(கனடா), நளினி (கனடா), சுகுமாரி(நோர்வே), மகேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவசோதிநாதன், செல்வநாதன், இராஜநாதன், இந்திராதேவி, சபாநாதன், யோகநாதன் ஜெகநாதன், மற்றும் இரவீந்திரநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி, சறோஜாதேவி, அமரர் நாகராஜா, மற்றும் கமலாசனி, சாந்தகுமாரி, ஞானதேவி, கருணா ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note:
கடந்த 18 மாதங்களாக, எமது அப்பா புற்று நோயெனும் கொடூர நோயை அமைதியாகவும், மன வைராக்கியத்துடனும் எதிர்த்து இறுதிவரை போராடினார். அவர் தனது உடலுக்கு மலர் வளையம் வைக்க விரும்புவோர்க்கு ஆத்மார்த்தமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்குமாறு கூறிச் சென்றார். அவரின் விருப்பத்தைப் பூர்த்தியாக்கும் வகையில், நீங்கள் அவருக்காக மலர் வளையத்திற்குச் செலவு செய்யும் பணத்தை, புற்று நோய் ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் கீழ்வரும் இணையத்தளத்தில் உங்கள் பங்களிப்பை வழங்குமாறு மிகவும் தாழ்மையாக வேண்டுகிறோம்.
பார்வைக்கு
17/06/2023 05:00:pm - 09:00:pm
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
18/06/2023 12:30:pm - 03:00:pm
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
No Education Details
No Workplace Details