யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் அருள்நாதன் அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நா.மு.சண்முகம்(பிரபல தெனியாய வர்த்தகர் NMS) பகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கலாவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
செல்வநாதன், மதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா, பிரியா, சதீஸ், கிரிஜா ,சுபனா, அனுதீபா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காசிபன், அச்சுதநாத், ராஜிகா, ராஜ்பவன், சுதர்ஷனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஷ்வின், கோதை , வாசகி, துளசி, அபூர்வா, தேனவன், பல்லவி, ஆருஜன், அபிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவானந்தசோதி, திலகவதி, துஷாயினி, ரூபினி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கேதாரநாதன் அவர்களின் சகலனும்,தனலட்சுமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.