யாழ். வல்வெட்டி தர்மகுலசிங்கம் சனசமூக நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடி சனசமூக நிலையத்தடியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கனகரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-06-2023
ஐந்தாண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்காலங்கள் ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமா உங்கள் நினைவுகளை?
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள் அது
எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால்
எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!
பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை
வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Tamil Tribute மூலமாக இவ் நினைவஞ்சலியை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.